கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடக்காவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவந்தார். பிரிந்த தம்பதியரின் குழந்தைகள் தங்கள் தாயுடன் இருந்தனர்.
இதனையடுத்து வெளிநாட்டில் வசிக்கும் தந்தை, 2019 டிசம்பரில் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது சிறுவனின் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதை உணர்ந்த தந்தை மீண்டும் கேரளாவுக்கு வந்து குழந்தைகள் நல ஆலோசகரை அணுகியுள்ளார்.
அப்போது தனது தாய் தனக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததை அந்த சிறுவன் கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சிறுவனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் தாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க...பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிடாதீர்!