ETV Bharat / jagte-raho

ரூ.40 லட்சம் பணம் வேண்டி கணவனை கடத்திய மனைவி: கூண்டோடு சிக்கிய கதை! - கணவனை கடத்திய மனைவி

கணவனை கடத்தி ரூ.40 லட்சம் பணத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளார் மனைவி. உறவினர்களிடம் கணவருக்கு கரோனா தொற்று என்று நாடகமாடியதை அடுத்து எழுந்த சந்தேகத்தின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், மனைவி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

wife kidnapped husband in bangalore
wife kidnapped husband in bangalore
author img

By

Published : Dec 6, 2020, 8:32 PM IST

பெங்களூரு (கர்நாடகம்): கணவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற மனைவி உள்பட உறவினர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 1ஆம் தேதி, தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் சோமசேகரிடம் தொலைபேசி மூலம் பேசிய மனைவி சுப்ரியா, தனக்கு வயிற்று வலி என்று கூறி மருத்து வாங்கி வரும்படி கோரியுள்ளார்.

இதனைக்கேட்ட சோமசேகர், உடனடியாக மருந்தகத்திற்குச் சென்று மருந்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அவ்வேளையில், அவசர ஊர்தியில் வந்த இரண்டு பேர், ‘நீங்கள் கரோனா தொற்று உடையவர். மருத்துவமனையில் இருந்து தப்பி வந்துள்ளீர்கள். எங்களுடன் மருத்துவமனைக்கு வர வேண்டும்’ என்று கூறி வலுக்கட்டாயமாக சோமசேகரை வாகனத்தில் ஏற்றிப் புறப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, வாகனத்தில் உள்ளவர்களின் பேச்சில் சந்தேகம் எழும்போதுதான், தான் கடத்தப்பட்டதை உணர்ந்துள்ளார் சேகர். சாமராஜா நகரிலுள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு சேகரைக் கடத்திச் சென்ற நபர்கள், அங்கு அவரை கட்டிவைத்துள்ளனர்.

மதுபோதையில் காவலரிடம் ரகளையில் ஈடுபட்டதாக பெண் மீது வழக்குப்பதிவு!

தொடர்ந்து அவரிடம் ரூ.40 லட்சம் பணம் உடனடியாக வேண்டும், அதனை உங்கள் மனைவி சுப்பிரியாவிடம் தர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். உடனடியாக தன்னை விடுவித்துக் கொள்ள நினைத்து, நண்பர்களுக்கு அழைத்து ரூ.10 லட்சத்தை முதல் தவணையாக மனைவிடம் வழங்கும்படி சேகர் வேண்டியுள்ளார்.

இதில் சந்தேகம் எழவே, வீட்டிற்கு நேரில் சென்று சுப்பிரியாவிடம் கணவர் சேகரைக் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர், “கணவருக்கு கரோனா தொற்று என்பதால், உறவினரான ககான், மாகடி சாலையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதில் நண்பர்களுக்கு சந்தேகம் மேலும் வலுக்க, பாகலகுண்டே காவல் நிலையத்தில் தகவலளித்துள்ளனர். தகவலறிந்து சுப்பிரியாவின் வீட்டிற்குச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு, அவர் சொன்ன தகவல்கள் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்ததுள்ளது.

மூவர் மீது தீவைத்த நபர் மரணம்: அவர்கள் நலம்... நடந்தது என்ன?

ஆம், தன் கணவனை, தன் தாய், உறவினர்களை சேர்த்துக் கொண்டு பணத்திற்காகக் கடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார் சுப்பிரியா. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சுப்பிரியாவைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரளித்த தகவலின் பேரில், சுப்பிரியாவின் தாய் உள்பட உறவினர் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பணத்திற்காக கணவனிடம் நாடகமாடி, கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் ஆண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.