காசியாபாத்: டீலா மோர் பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த மூன்று குழந்தைகளின் தாயான தன்னை, திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, ஒரு பெண் லோனியில் உள்ள ஒருவருக்கு தன்னை இரண்டு லட்ச ரூபாய்க்கு விற்றதாகக் காவல் நிலையத்தில் புகார்.
அந்தப் பெண் தன்னை லோனிக்கு அனுப்பியதாக காவல் துறையினரிடன் தெரிவித்துள்ள கைம்பெண், அங்கு மூன்று பேர் போதையில் இருந்ததாகவும், அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
"நான் எப்படியோ வீட்டை அடைந்தேன். வீட்டிற்கு வர நான் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது," என்று ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். தன்னை ஏமாற்றிய அந்தப் பெண் பல இடங்களில் இதே வேலையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இதுபோன்ற ஒப்பந்தங்களையும் முன்னதாகவே சமூக விரோதிகளுடன் மேற்கொண்டுள்ளார் என்று கைம்பெண் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அங்கோடா லொக்கா வழக்கு: நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு!
இந்த சம்பவத்தையடுத்து தனது பிள்ளைகளை காணவில்லை என்று கூறிய அவர், அதே பெண்ணால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தனது சந்தேகத்தை பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.