ETV Bharat / jagte-raho

'கடனை கட்டத் தவறினால் 120 சதவீதம் வட்டி'- மிரட்டும் சீன கந்துவட்டி செயலிகள்! - சீன செயலி

கடனை கட்டத் தவறினால் 120 விழுக்காடு கந்துவட்டி விதித்து சீன கடன் செயலிகள் வாடிக்கையாளர்களை மிரட்டிவருகின்றன. ஆன்லைன் கடன் செயலி (லோன் ஆப்) மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டு சீனர்களுக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து பார்க்கலாம்.

chinese loan apps news  loan apps  instant loan apps to chinese  What's the link instant loan apps to chinese  மிரட்டும் சீன கந்துவட்டி செயலிகள்  சீன கந்துவட்டி செயலிகள்  கடன் செயலிகள்  ஆன்லைன் கடன் செயலி  தகவல்கள் திருட்டு  சீன செயலி  ரா

author img

By

Published : Jan 17, 2021, 2:25 AM IST

சென்னை: கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் கல்வி கூடங்கள், நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டன. பொதுமக்களும் வீட்டிலேயே முடங்கினர். இதனைப் பயன்படுத்தி கொண்ட மோசடி கும்பல் குறைந்த வட்டிக்கு லோன் தருவதாகவும், இ.எம்.ஐ கட்ட தேவையில்லை எனவும் பொதுமக்களை தொடர்புக்கொண்டு ஆசை வார்த்தைகள் கூறி லட்சக் கணக்கில் கொள்ளையடித்து வந்தனர்.

இதற்கு மாறாக ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஆன்லைனில் லோன் கொடுத்து கோடி கணக்கில் கொள்ளையடித்து வந்துள்ளனர். இது குறித்து, வேங்கை வாசல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் உடனடியாக லோன் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி எம். ரூபி என்ற லோன் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வைத்தார்.

தகவல்கள் திருட்டு

அந்தச் செயலியை இன்ஸ்டால் செய்து அலோவ் என்ற பட்டனை அழுத்தியவுடன் ரூ.5,000 வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் எனக் காண்பித்தது. இதனால் 5000 ரூபாயை கடனாக பெற்றேன். இதையடுத்து, ரூ.1,500ஐ வட்டியாக கழித்துக்கொண்டு ரூ.3,500ஐ கொடுத்தனர். மேலும் ஒரு வாரத்தில் ரூ.5,000 கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை தராததால் கணேசனுக்கு தொடர்ந்து செல்போன் செய்து தொந்தரவு கொடுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் கொடுத்து வந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கணேசனின் செல்போனில் உள்ள அந்தரங்க தகவல்களை திருடி பரப்பி விட்டு கடனை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதனால் கணேசன் வேறு வழியில்லாமல் மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவில் கால்சென்டர்
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் 110 ஊழியர்களை வைத்து True kindle technology pvt ltd என்ற பெயரில் கால் சென்டர் போல் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சீன நாட்டை சேர்ந்த சியா யமோவ், யூ யுவ்ன்லூன் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த விசாரணையில் சீனாவை சேர்ந்த ஹாங்க் என்பவர் 40க்கும் மேற்பட்ட லோன் செயலியை தயாரித்து முதலீடு செய்து பெங்களூருவில் கால் சென்டர் போல் நடத்தி வருவது தெரியவந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் தகவல்களை திருட 46 சாப்ட்வேர்களை பயன்படுத்தி உள்ளனர். இதுதவிர மிரட்டி ஆபாசமாக பேசி பணத்தை பறிக்க ஊழியர்களை வைத்திருப்பது தெரியவந்தது. இவ்வாறு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆன்லைன் லோன் வழங்கி பல கோடி ரூபாய் வரை மிரட்டி வட்டியாக பெற்றுள்ளது தெரியவந்தது.

ரா அலுவலர்கள் விசாரணை

இவர்கள், இந்தப் பணத்தை சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பப்படுவதும் தெரியவந்தது. மேலும் குரோம்பேட்டையில் இயங்கக்கூடிய நிறுவனத்தின் பெயரில் 1100 சிம்கார்டுகள் வாங்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிம்கார்டுகளை எந்த தேவைக்காக பயன்படுத்த உள்ளனர் என ஆராயாமல் வழங்கிய தொலை தொடர்பு சேவை நிறுவன ஊழியர்கள் இருவர் மற்றும் இரண்டு நிர்வாகிகளை காவலர்கள் கைது செய்தனர்.

இந்தச் செயலியை உருவாக்கி லோன் வழங்கிவிட்டு 120 சதவிகிதம் வரை வட்டி பணத்தை கொள்ளையடித்த முக்கிய குற்றவாளியான ஹாங்க் சீனாவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. சட்டவிரோதமான பண பரிவர்த்தனை நடந்துள்ளதால் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான ஹாங்கை பிடிக்க இண்டர்போல் உதவியை நாட மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சீனர்களிடம் ரா மற்றும் மத்திய உளவுதுறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எச்சரிக்கை
மேலும் ஆன்லைன் லோன் ஆப் மூலம் இந்திய மக்களின் தகவல்களை திருடி சீனர்களுக்கு விற்றுள்ளனரா அல்லது சீனாவிற்காக உளவு வேலை பார்த்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் லோன் செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் எதையும் படிக்காமல் அலோவ் பட்டன் அழுத்தப்படுவதால் செல்போனில் உள்ள தகவல்கள் அனைத்துமே திருடப்படும்.

இந்தத் தகவல்களை வைத்து கொண்டு சிம்கார்டுகளை வாங்கி தீவிரவாதிகளுக்கு விற்கின்றனர். ஆகவே, எந்த ஒரு தெரியாத ஆப்பையும் டவுன்லோடு செய்ய வேண்டாம் எனவும் தெரியாத நபர் கால் செய்து ஆப்பை டவுன்லோடு செய்யுமாறு, இதையும் மீறி யாராவது ஆப்பை டவுண்லோடு செய்ய வலியுறுத்தினால் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

கோரிக்கை

ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட செயலியா என ஆராய்ந்து பதிவிறக்கம் செய்தால் தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு சட்டத்தை கொண்டு கந்துவட்டியை ஒழித்தது போல் தற்போது டிஜிட்டல் முறையில் செயல்படும் கந்துவட்டி செயலியை முழுவதுமாக அரசு ஒழிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கடன் செயலிகள் நடத்தி தகவல்கள் திருட்டு... சீனர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.