ETV Bharat / jagte-raho

பழிக்கு பழியாக 7 வருடங்கள் கழித்து கொல்லப்பட்ட வில்லிவாக்கம் வழக்கறிஞர்!

வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், 7 ஆண்டுகள் காத்திருந்து அவர்கள் பழி தீர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

villivakkam murder
villivakkam murder
author img

By

Published : Oct 7, 2020, 2:33 AM IST

சென்னை : வியாசர்பாடியில் பிரபல ரவுடியான சேராவின் மகன் கதிரவன், அவனது கூட்டாளி தொப்பை கணேசன். இவர்கள் ஒரு அணியாகவும், மற்றொரு ரவுடியான சூழ்ச்சி சுரேஷ் ஒரு அணியாகவும் மோதிக் கொண்டனர்.

கதிரவன் கும்பல், சூழ்ச்சி சுரேஷின் சித்தப்பாவான திமுக பிரமுகர் "இடிமுரசு" இளங்கோவனை கடந்த 2013-ல் கொலை செய்தது. தொடர்ந்து, "சூழ்ச்சி" சுரேஷின் அண்ணன் ரவுடி பழனியை 2016-லும், அவரது நண்பர் ரவுடி திவாகரை 2019-லும் கதிரவன் அணியினர் கொலை செய்தனர்.

அடுத்தடுத்த தன் பக்கம் 3 பேரை இழந்த "சூழ்ச்சி" சுரேஷ், கதிரவன் தரப்பை பழிவாங்கும் நடவடிக்கையாக, 7 ஆண்டுகளாக கழித்து ராஜேஷ் கொல்லப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் ராஜேஷ், சேராவின் மகன் கதிரவன், தொப்பை கணேசன் ஆதரவாளராக செயல்பட்டு வழக்குகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

கதிரவனுக்கும் தொப்பை கணேசனுக்கும் சட்ட ரீதியாக உதவி செய்து வந்ததால் ராஜேஷை எதிர்தரப்பு தீர்த்துக்கட்ட திட்டமிட்டது.

தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததை அறிந்த ராஜேஷ் வியாசர்பாடியை காலி செய்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வில்லிவாக்கத்தில் வசித்து வந்துள்ளார். ராஜேஷ் வியாசர்பாடியில் கால் வைத்தால் தீர்த்துக் கட்டுவோம் என எதிர்தரப்பு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு வியாசர்பாடியில் கால்பந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்ய, அதில் கலந்து கொண்ட ராஜேஷை மைதானத்திலேயே கொல்ல "சூழ்ச்சி"சுரேஷின் கூட்டாளி முருகேசன் கும்பல் சுற்றி வந்துள்ளனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய ராஜேஷை வில்லிவாக்கம் வரை பின் தொடர்ந்து சென்று தீர்த்து கட்டியுள்ளனர்.

தொடர்ந்து, ரவுடி முருகேசன், ரமேஷ், அருண், ஸ்ரீநாத், வைரமணி, ருக்கேஷ்வரன், சஞ்சய் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையும் படிங்க : கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.