உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்துவரும் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னுடன் பணிபுரியும் சக ஆண் பணியாளர்கள் இரண்டு பேர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து அதனை காணொலி எடுத்துள்ளனர்.
மேலும் அந்தக் காணொலியை சமூக வலைதளங்களில் வெளியிடப்போகிறோம் எனவும் அப்பெண்ணை அவர்கள் மிரட்டிவருகின்றனர். ஏற்கனவே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி அதிர்ச்சியிலிருந்து மீளாத அவருக்கு இவர்களின் மிரட்டல் பேரிடையாக இருந்தது.
இதையடுத்து, துணிந்த செயல்பட்ட பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அவர்கள் இருவர் மீதும் புகார் செய்தார். தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தவறு செய்திருக்கும்பட்சத்தில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என அம்மாநில காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.