கோவை பேரூர் பகுதி அறிவொளி நகர் பச்சப்பள்ளி தோட்டத்தில் ரெகெண்டா என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் ஒரு பயன்படுத்தாத கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் இறங்கி சோதனை செய்தபோது அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது.
அதனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.