ETV Bharat / jagte-raho

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை! - இருவர் போக்சோவில் கைது! - போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

மதுரை: +2 மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

case
case
author img

By

Published : Dec 5, 2020, 9:23 AM IST

வாடிப்பட்டியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் சோழவந்தானில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, தனது உறவினர் வீட்டுக்கு கடத்திச் சென்று நண்பர் சபரியுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

பின்பு அங்கிருந்து தப்பிய மாணவி, தனது உறவினர்களிடம் நடந்ததை கூறியதன் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதையடுத்து கோகுல்ராஜ் (23), மற்றும் அவரது நண்பரான சபரி (23) ஆகிய இருவரையும், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: மனைவி பிரிந்து சென்றதற்காக கொலை: ஒருவர் சரண், 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.