வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் வசித்து வரும், சின்னத்திரை நடிகரான நாஞ்சில் விஜயன், யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக சூர்யா தேவி என்பவரிடம், நடிகை வனிதா விஜயகுமார் திருமண சர்ச்சை குறித்து விஜயன் பேட்டி எடுத்துள்ளார். ஆனால், அந்தப் பேட்டிக்குப் பிறகு சூர்யா தேவிக்கு எதிர்ப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் நாஞ்சில் விஜயன் மீது ஆத்திரத்தில் இருந்த சூர்யா தேவி, 3 பேருடன் நாஞ்சில் விஜயன் இல்லத்திற்குள் நுழைந்து அவரை தாக்கி, அரை நிர்வாணத்துடன் ஆட்டோவில் தூக்கிச் சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய நாஞ்சில் விஜயன், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ், சூர்யா தேவிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள நாஞ்சில் விஜயன், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த விஜயன், சூர்யா தேவி செய்யும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட அந்தரங்க செயல்கள் அனைத்தும் தனக்கு தெரியும் என்பதால், அவற்றை தான் வெளியிட்டு விடுவேனோ என்ற பயத்தில் தன்னை அவர் தாக்குவதாக கூறினார். இதையடுத்து, நாஞ்சில் விஜயனை தெற்கு மண்டல இணை ஆணையர் ஏ.ஜி.பாபுவிடம் இது குறித்து புகாரளிக்கும்படி அறிவுறுத்தி, காவலர்கள் அவரை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ’என்னை எடுத்துக்காட்டாக நீங்க சொல்லக்கூடாது’ - பொங்கிய ரியோ ராஜ்