ETV Bharat / jagte-raho

பைக்கை மீட்க முயன்றபோது விபத்து - இருவர் உயிரிழப்பு - இருவர் பலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இருவர் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

TRAIN ACCIDENT
author img

By

Published : Jul 15, 2019, 10:09 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவலாங்காடு பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனும், அவரது நண்பர் சரவணனும் அரசி மூட்டை ஏற்றிக்கொண்டு, பெரிய களக்காட்டூரிலிருந்து சின்னம்மா பேட்டை நோக்கி சென்றனர்.

அப்போது, திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளத்திற்கு இடையே உள்ள கற்களில் பைக்கின் டயர் சிக்கியது. இதையடுத்து இருவரும் அரிசி மூட்டையுடன் இருந்த பைக்கை மீட்க முயன்றனர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில், பைக் மீது மோதியதில் இருவரும் 500 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

train accident

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அரிசி மூட்டையுடன் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இருவர் விரைவு ரயில் மோதி 500 மீட்டர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவலாங்காடு பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ஜெகநாதன் வயது 35 இவரும் இவரது நண்பருமான ஆவடி ஜே பி எஸ்டேட்டை சேர்ந்த மணிகண்டன் மகன் சரவணன் என்பவரும் இன்று இரவு அரிசி மூட்டை ஏற்றிக்கொண்டு பெரிய களக்காட்டூரிலிருந்து சின்னம்மா பேட்டை நோக்கி சென்றனர். அப்போது திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது தண்டவாளத்திற்கு இடையே உள்ள கற்களில் பைக்கின் டயர் சிக்கியது.இதையடுத்து இருவரும் பைக்கை விட்டு இறங்கி அரிசி மூட்டையுடன் இருந்த பைக்கை மீட்க முயன்றனர். அப்பொழுது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் பைக் மீது மோதியது இதில் இருவரும் 500 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பைக்குடன் 500 மீட்டர் வரை இருவரும் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.