ETV Bharat / jagte-raho

மதுரையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - madurai

மதுரை: பிரபல ரவுடியை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடி கொலைச் செய்யப்பட்ட இடம்
author img

By

Published : May 3, 2019, 9:20 PM IST

மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, சாராய கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இன்று மதியம் மீனாட்சியம்மன் கோயில் தெற்கு வாசல் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

பிரபல ரவுடி பட்டபகலில் ஓட ஓட வெட்டி கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த பால்பாண்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
03.05.2019

*மதுரையில் பிரபல ரவுடியை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கடையில் வைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை தப்பியோடிய மர்ம கும்பலுக்கு வலைவீச்சு*

மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி,

இவர் மீது மதுரை மாநகரில் கொலை கொள்ளை மற்றும் சாராய விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது,

இந்த நிலையில் இன்று மதியம் தெற்கு வாசல் பகுதியில் பால்பாண்டி நடந்து சென்றபோது பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி சென்று அல்லது உயிருக்கு பயந்து அருகில் இருந்த பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் புகுந்த பால்பாண்டியை மர்ம கும்பல் சரமாரியாக கொடூரமாக வெட்டிக்கொலை செய்ததுள்ளது,

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்குவாசல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது,

மதுரையில் பட்டப்பகலில் ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த விவகாரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visual sent in ftp
Visual name : TN_MDU_04_03_MADURAI ONE MEN MURDER NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.