திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கற்குவேல். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து காவலர் கற்குவேலை நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் திடீரென கைது செய்தனர். இவரது கைது குறித்து பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, கற்குவேல் காவலர் பணியில் இருக்கும்போதே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பில் இருந்து வந்துள்ளார். குறிப்பாக திருநெல்வேலி புறநகர் பகுதியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்களில் கற்குவேல் ஈடுபட்டது தெரியவந்தது.
பணி ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்குவேல் திருட்டில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் கற்குவேலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இதில் அவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது என தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் கற்குவேலை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே இரவில் நடந்த நான்கு கொள்ளைச் சம்பவங்கள் - பொதுமக்கள் அச்சம்