ETV Bharat / jagte-raho

மாபெரும் பணமோசடி - இத்தாலி தூதரக உயர் அலுவலரின் கார் ஓட்டுநர் கைது! - பணமோசடி

சென்னை: வங்கி மற்றும் அரசு நிறுவனங்களிலிருந்து பேசுவது போன்று பெரும் பணமோசடி செய்து கைதான மூவரில் ஒருவர் டெல்லி இத்தாலிய தூதரக உயர் அலுவலரின் கார் ஓட்டுநர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இந்த மோசடிகளை பிகாரிலிருந்து நடத்திவரும் தலைவன் குறித்தும் மத்திய குற்றப்பிரிவுக் காவல் துறையினர் விசாராணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

case
case
author img

By

Published : Feb 25, 2020, 4:16 PM IST

வங்கியிலிருந்து பேசுவது போன்று வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களைத் திருடி பணமோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவினர் டெல்லியில் கைதுசெய்து சென்னை கொண்டுவந்துள்ளனர்.

தீபக்குமார், தேவகுமார், வில்சன் என்ற அந்த மூன்று பேரில் வில்சன் என்பவர் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் பணிபுரியும் ஒரு உயர் அலுவலரின் கார் ஓட்டுநராகவும் இருந்துவந்துள்ளார்.

என்ன நடந்தது?

வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களைத் திருடி அதன்மூலம் பெருமளவில் பணமோசடி நடைபெறுவதாகப் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்பட்டுவரும் வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு புகாரளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடந்துவந்தது.

இந்நிலையில், திருடப்பட்ட வாடிக்கையாளர் வங்கி விவரங்களை வைத்து சோதனை மேற்கொண்டதில், வாடிக்கையாளர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் அனைத்தும், ’Mobikwik’ என்ற செயலி மூலம் சென்றிருப்பது தெரியவந்தது. பணப்பரிமாற்றம் செய்வதற்காகத் தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஏராளமான தனியார் பணப்பரிவர்த்தனை செயலிகள் செயல்பட்டுவருகின்றன. அதேபோன்ற ஒரு பணபரிமாற்ற செயலிதான், மோபிக்விக்.

எப்படி நடக்கிறது இந்த மோசடி?

  • பிரபல வங்கிகளில் உள்ள கால் சென்டர்கள், செல்போன் கம்பெனிகளிலிருந்து, வாடிக்கையாளர்களின் விவரங்களைக் கள்ளத்தனமாக இந்த மோசடியாளர்கள் பெறுகின்றனர்.
  • அப்படிப் பெற்ற அவர்களின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு வங்கி, வருமான வரி, ஓய்வூதிய திட்ட அலுவலகம், இப்படிப் பலவகையான பெயர்களைச் சொல்லி வாடிக்கையாளர்களிடம் விவரங்களைக் கேட்கின்றனர்.
  • வங்கி, அரசு நிறுவனங்கள் என்றவுடன் வாடிக்கையாளர்களும் அதனை நம்பி தங்களுடைய விவரங்களைத் தெரிவிக்கின்றனர்.
  • வாடிக்கையாளர்களை ஏமாற்றி வாங்கப்பட்ட அந்த விவரங்களை, மோசடி நபர்கள் இந்த மோபிக்விக் செயலியில் பதிவுசெய்கிறார்கள்.
  • அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணிற்கு ஒரு OTP நம்பர் வந்திருக்கும். அதனைத் தெரிவிக்கக் கூறும் மோசடியாளர்களிடம் வாடிக்கையாளர்களும் அந்த எண்ணைக் கூறுகிறார்கள்.
  • வாடிக்கையாளர்கள் OTP எண்ணைக் கூறிய அடுத்த நொடியே, வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணம், உடனடியாக இந்த மோபிக்விக் செயலியின் மூலம் திருடப்படுகிறது.

மோசடியாளர்கள் கைதுசெய்யப்பட்டது எப்படி?

மத்திய குற்றப்பிரிவுக் காவல் துறையினர் இது குறித்து மோபிக்விக் நிறுவனத்திற்கு விவரங்களைக் கேட்டதன்பேரில், அவர்கள் தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில், டெல்லியில் உள்ள ஆர்.கே. புரம் பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய அலுவலர் ஒருவரின் கார் ஓட்டுநராக வேலைபார்த்து வந்துள்ளார்.

இவருடைய செல்போனில் உள்ள மோபிக்விக் செயலி மூலம்தான் வாடிக்கையாளர் வங்கிக்கணக்கிலிருந்து திருடப்பட்ட பணம், வேறு கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இதற்கு உடந்தையாக இருந்த தேவக்குமார், தீபக்குமார் ஆகியோரையும் மத்திய குற்றப்பிரிவினர் டெல்லியில் வைத்து கைதுசெய்தனர்.

நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர்களான இம்மூவரையும் வைத்து, வாடிக்கையாளர் வங்கிக்கணக்கிலிருந்து திருடும் கும்பல் ஒன்று, இந்த வேலையை நடத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இம்மூன்று பேரையும் சென்னை கொண்டுவந்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அவ்விசாரணையில் மோபிக்விக் செயலி மூலம், பணமானது பிகாரில் உள்ள மோசடி கும்பல் தலைவன் ஒருவனுடைய கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப் பல கோடிகள் வரை மோசடி செய்து இவர்கள் பணம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மோசடிக் கும்பலின் தலைவன் யார், இன்னும் எத்தனை மாநிலங்களில் இவர்களுக்கு வலைப்பின்னல் இருக்கிறது, அதிலும் முக்கியமாக இத்தாலிய தூதரக உயர் அலுவலருக்கு இம்மோசடியில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: வங்கி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது - முக்கியக் குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.