ETV Bharat / jagte-raho

குடும்பத் தகராறு காரணமாக வெவ்வேறு இடங்களில் மூவர் கொலை...! - ராமநாதபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக மூவர் கொலை

ராமநாதபுரம்: குடும்பத் தகராறு காரணமாக மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
author img

By

Published : Nov 13, 2019, 6:57 PM IST

ராமநாதபுரம் வண்டிக்காரன் தெருவில் வசித்து வந்தவர் ஜெயராணி(40). இவருக்கும் சேதுபதி பாண்டியன்(47) என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால், ஏழு ஆண்டுகளுக்கு முன் சேதுபதி பாண்டியன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணுக்கு 50 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், ஜெயராணி பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு மாற்றக்கோரி இரண்டாவது மனைவி அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார். வழக்கம்போல் ஜெயராணிக்கும், சேதுபதியின் இரண்டாவது மனைவிக்கும் இன்று காலை வாக்குவாதம் நடந்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராணியை சேதுபதி குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயராணி, மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து சேதுபதி பாண்டியனை தேடி வருகின்றனர்.

அதேபோல், ராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்த முனீஸ்வரன் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அவரது சகோதரர் கலீல் குமார், முனீஸ்வரனிடம் பலமுறை எச்சரித்துள்ளார். இருந்தபோதும், நேற்று இரவு மீண்டும் குடிபோதையில் வீட்டில் பிரச்னை செய்துள்ளார் முனீஸ்வரன். பின்னர், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கலீல் குமார் கட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கலீல் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

murder
மற்றொரு சம்பவத்தில் பரமக்குடி அருகேயுள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா மகன் காட்டுராஜா(54). இவருக்கு முத்துலெட்சுமி(46) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் பரமக்குடி வைகை நகரில் வசித்து வருகின்றனர். காட்டுராஜா 25 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் பரமக்குடி திரும்பிய காட்டுராஜா, இங்குள்ள சொத்துக்களை விற்று குவைத்தில் வசிக்க போவதாக கூறியதால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனைவி முத்துலெட்சுமி, அருகில் இருந்த மரக்கட்டையால் கணவரை தலையில் பலமாக தாக்கினார். இதில் மயக்கம் அடைந்த காட்டுராஜாவின் கை, கால்களை கட்டி அறையில் வைத்து பூட்டியுள்ளார் முத்துலெட்சுமி.

அதன்பின், பூட்டப்பட்ட அறையை குடும்பத்தினர் திறந்து பார்த்தபோது காட்டுராஜா இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற எமனேஸ்வரம் போலீசார் காட்டுராஜாவின் உடலை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து முத்துலெட்சுமியை கைது செய்தனர்.

Intro:இராமநாதபுரம்
நவ.13
இராமநாதபுரத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நாளில் குடும்ப தகராறில் 3 பேர் கொலை சம்பவம் .Body:இராமநாதபுரம்
வண்டிக்காரன் தெருவில் வசித்து வந்தவர் ஜெயராணி (40)இருக்கும் சேதுபதிபாண்டியம்(47) என்பவருக்கும் திருமணமாகி 20 கடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் கணவர் சேதுபதிபாண்டியன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
இவர்களுக்கு திருமணமாகி
7 வருடங்களுக்கு பிறகு பெண்ணிக்கு குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் ஜெயராணி பெயரில் வீடு தன் பெயரில் மாற்றக் கோரி இருவரிடையேயும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது. இன்று காலை அதே போல் வாக்குவாதம் நடந்த போது சேதுபதி மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராணியை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயராணி மருத்துவமனை எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பஜார் போலீஸார் வழக்குப் பதிந்து சேதுபதி பாண்டியனை தேடி வருகின்றனர்.

அதேபோல் இராமநாதபுரம் கே.கே நகர் பகுதியில் வசித்து வந்த முனீஸ்வரன் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளர். இது குறித்து தம்பி கலீல் குமார் அண்ணனிடம் பல முறை எடுத்து கூறியுள்ளார். ஆனால் நேற்று இரவு குடி போதையில் வீட்டில் பிரச்சினை செய்துள்ளார். பின் முனீஸ்வரன் தூங்கியக் கொண்டிருந்த போது தம்பி கட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து
கலீல் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு
சம்பவத்தில் பரமக்குடி அருகேயுள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா மகன் காட்டுராஜா(54).இவருக்கு முத்துலெட்சுமி(46) என்ற மனைவியும்,ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர்.இவர்கள் பரமக்குடி வைகை நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பரமக்குடி திரும்பிய காட்டுராஜா, இங்குள்ள சொத்துக்களை விற்று குவைத்தில் வசிக்க போவதாக குடும்பத்தில் கூறியதை தொடர்ந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த, 11ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த காட்டுராஜாவிற்கும், மனைவி முத்துலெட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மகள் தடுக்க அவரை தாக்கியுள்ளார் இதில் ஆத்திரம் அடைந்த மனைவி முத்துலெட்சுமி அருகில் இருந்த மரக்கட்டையால் கணவரை தலையில் பலமாக தாக்கினார். இதில் மயக்கம் அடைந்த அவரை கை, கால்களை கட்டி பயத்தில் அறையில் வைத்து பூட்டியுள்ளார்.
காலை அவரது குடும்பத்தினர் பூட்டப்பட்ட அறையினை திறந்து பார்த்தபோது அங்கு காட்டுராஜா இறந்து கிடந்த நிலையில் இருந்ததை கண்டனர். தகவல் தெரிந்ததும்,எமனேஸ்வரம் காவல்துறையினர் இறந்த காட்டுராஜா உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து அவரது முத்துலெட்சுமி கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.