வடசென்னை பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ராயபுரம் சரக உதவி ஆணையர் தினகரன் தலைமையில், காசிமேடு பகுதியில் தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் பகுதியில் கஞ்சாவை விற்க இருந்த மூன்று பேரை கைது செய்த தனிப்படையினர், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் மூவரும், அதேபகுதியைச் சேர்ந்த மகேஷ், விக்னேஷ் மற்றும் தியாகு என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காவல் துறை உதவியோடு களைகட்டிய மது விற்பனை!