தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் கபில் என்ற கபில்தேவ் (27). இவர், கடந்த 13ஆம் தேதி தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளையைச் சேர்ந்த இஸ்ரேவல் என்ற ராஜவேல் (29) அவரது ஆதரவாளர்கள் ஆறு பேர் கபில்தேவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கபில்தேவ், தூத்துக்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி தெற்கு காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சங்கர், காந்திமதி, செந்தில்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், சின்னமணி நகர் பூங்கா அருகில் இஸ்ரேவல் என்ற ராஜவேல், அலெக்ஸ் என்ற விஜயபிரகாஷ், சாம் என்ற டேனியல் ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர், தூத்துக்குடி குற்றவியில் நீதித்துறை நடுவர் எண் ஒன்று முன்பு ஆஜர் படுத்தி நிதிமன்ற உத்தரவுப்படி கோவில்பட்டி மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், கொலைசெய்யப்பட்ட கபில்தேவ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணாமல்போன 14 வயது சிறுமி: 3 மணி நேரத்தில் மீட்பு!