ETV Bharat / jagte-raho

நாகர்கோவில் காசி மீது மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்! - காதல் மன்னன் காசி வழக்கு

திருமணமான பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து, நெருக்கமாக இருக்கும் காட்சிகளை படம்பிடித்த காசியை சில மாதங்களுக்கு முன் காவல் துறை கைது செய்தது. மேலும் ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தற்போது மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Kasi case third charge sheet filed, playboy Kasi, nagercoil Kasi, third charge sheet filed against kasi, நாகர்கோவில் காசி, காசி வழக்கு, nagercoil crime, kanyakumari crime, kasi news, playboy kasi, காதல் மன்னன் காசி வழக்கு
nagercoil Kasi case
author img

By

Published : Jan 25, 2021, 5:21 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலைக் கலக்கிய காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பது போல ஏமாற்றி நெருக்கமாக இருந்ததை ரகசிய படக்கருவிகள் கொண்டு படம் பிடித்த வழக்கில் 3ஆவது குற்றப்பத்திரிகை நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்புகொண்டு காதலிப்பதுபோல் நடித்து, அவர்களோடு தனியறையில் நெருக்கமாக இருந்து ரகசிய படக்கருவிகள் மூலம் படம் பிடித்து, அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன.

காசி வழக்கு கடந்து வந்த பாதை - அனைத்து தகவல்களும் ஒரே இணைப்பில்

அதைத் தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார், இதுவரை காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்த புகார்கள் என மொத்தம் அவர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கந்துவட்டி, பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுப்பது தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஐந்து வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. இச்சூழலில் காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.