ETV Bharat / jagte-raho

நாயை அடித்தே கொன்ற கொடூரர்கள்! - The savages who beat the dog to death

திருவள்ளூர்: நாயை அடித்துக் கொன்ற இரக்கமில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

death
death
author img

By

Published : Jan 16, 2021, 3:59 PM IST

மாங்காட்டை அடுத்த கெருகம்பாத்தை சேர்ந்த சத்தியராஜ், அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு தினந்தோறும் உணவு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளவர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வாறு உணவு வைக்கும் போது, அங்கு உணவு சாப்பிட வரும் ஒரு நாய் இல்லாததை அறிந்துள்ளார். தேடி பார்த்தபோது, அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்குள், முன் கால்கள் உடைந்து, முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் நாய் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நிறுவனத்திற்குள் நாய் புகுந்ததால் ராஜேஷ் கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் இரும்பு ராடால் அந்த நாயை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். இதனை தட்டிக்கேட்ட சத்தியராஜையும் அவர்கள் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக காயமடைந்த நாயை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சத்தியராஜ் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நாய் இறந்துள்ளது. இதையடுத்து நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியராஜ் மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதைக்கப்பட்ட நாயை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்ய தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பிறகு நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

நாயை அடித்தே கொன்ற கொடூரர்கள்!

தினந்தோறும் உணவு வைக்கும்போது சாப்பிட வரும் நாய் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு சத்தியராஜுக்கு மட்டுமின்றி கேட்போர் அனைவருக்குமே நெஞ்சம் பதைபதைக்கிறது. தொடர்புடைய நபர்கள் உரிய நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: கத்தியால் குத்தி இளைஞர் கொலை: மது போதையில் ஏற்பட்ட விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.