திருப்பூர், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது நல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (செப்.22) காலை ஏழு மணி அளவில் நல்லூர் காவல் நிலையத்திற்கு சரண்யா என்ற பெண்ணின் கொலை வழக்கு தொடர்பாக மணிகண்டன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் திடீரென உயிரிழந்ததாக அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய அவரது உறவினர்கள், காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட ஒரு மணி நேரத்தில் மணிகண்டன் உயிரிழந்தது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும், காவல் துறையினர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்திருந்த திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வாகனத்தை முற்றுகையிட்ட மணிகண்டனின் உறவினர்கள், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஜய கார்த்திகேயன், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடற்கூறாய்வு சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: வேளாண் மசோதாவை ஆதரித்தது ஏன்? - முதலமைச்சர் விளக்க
ம்