சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ளது பார்ஷனாத் ஜெயின் கோயில். இந்தக் கோயிலில் நேற்று முன்தினம் (அக்.10) சாமி சிலையின் தலையில் இருந்த வெள்ளி கிரீடம் காணாமல் போனது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் கமிட்டி செயலாளர் அசோக்குமார் உடனடியாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், நீல நிற சட்டை அணிந்த ஒருவர், சிலையை தொட்டு கும்பிடுவது போல் சிலைமேல் இருந்த வெள்ளி கிரீடத்தை திருடி செல்கிறார். அதற்கு முன்னதாக சாமி சிலையின் காதுகளில் இருந்த வெள்ளி பொருள்களையும் திருட முயற்சி செய்கிறார்.
அதனை எடுக்க முடியாததால் கிரீடத்தை மட்டும் அந்த நபர் திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தாழங்குடாவில் ரூ.13.06 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புப் பணி, மீன் இறங்கு தளம்!'