சென்னை மக்கீஸ் தோட்டம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் கரையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுக்குள் விழுந்த பந்தை எடுக்க சிறுவன் பிரதீப் (8) முயன்றபோது, ஆற்றுக்குள் தவறி விழுந்து மூழ்கினார். அவரை காப்பாற்ற ரித்தீஷ் குமார் (13), ஸ்டீபன் (12) ஆகிய சிறுவர்களும் ஆற்றில் இறங்கியுள்ளனர்.
பின்னர் ரித்தீஷ் குமாரும் சேற்றுக்குள் சிக்கிக்கொள்ள, அங்கிருந்த மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டு அனைவரையும் அழைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு துறையினர் உடனடியாக சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ரித்தீஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் ஆற்றில் இருந்து பிரதீப் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: