திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள நடுவனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் ராமன் (10). இவர் நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார். கரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாததால், வீட்டில் இருந்த சிறுவன் கதவைத் தாழிட்டுக்கொண்டு தொட்டில் சேலையில் தூரி ஆடியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழே விழுந்த நிலையில், சேலை கயிறு ராமனின் கழுத்தை இறுக்கியுள்ளது. சிறுவன் சிக்கிக்கொண்டு கதறிய சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கழுத்து சேலையில் இறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக வீட்டின் கதவை உடைத்து ராமனை தூரியிலிருந்து மீட்டு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ராமன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து தனியாருக்குத் தாரை வார்ப்பு: புளியந்தோப்பு புதிய துணை மின் நிலைய பராமரிப்பு பணிக்கு ரூ.202.39 கோடி ஒதுக்கீடு!