ஹைதராபாத்: லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் கோவிந்த் என்பவரை தெலங்கானா லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைதுசெய்தனர்.
தெலங்கானா மாநிலம் காமரெட்டி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்தவர் கோவிந்த்.
இக்காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் ஜெகதீஷ். இவர்கள் இருவரும் மீதும் குற்றவாளியை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஜெகதீஷ் மற்றும் உதவி ஆய்வாளர் கோவிந்த் உள்ளிட்ட காவலர்கள் சிலர் மீது நவ.19ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் உதவி ஆய்வாளர் கோவிந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கூறுகையில், “நவம்பர் 8ஆம் தேதி சுதாகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க ஆய்வாளர் ரூ.5 லட்சம் பேரம் பேசியுள்ளார்.
அன்றைய தினமே சுதாகர் விடுவிக்கவும்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் கோவிந்த் ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளார். தற்போது கோவிந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளோம்.
வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவரிடம் விசாரணை!