ETV Bharat / jagte-raho

ஒடிசாவில் 22 நாள்களாக 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

ஒடிசா: பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு ஓடிவந்த 17 வயது சிறுமி, 22 நாள்களாக பாலியன் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

harrasment
harrasment
author img

By

Published : Oct 15, 2020, 11:20 AM IST

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் திர்த்தோல் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி, குழந்தைகள் நல காப்பகத்தில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் வீடு திரும்ப நினைத்த சிறுமி கட்டாக்கில் உள்ள ஓம்பி சதுக்கத்தில் பேருந்திற்காக காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால், திர்த்தோலுக்குச் செல்வதற்குப் பதிலாக அந்த நபர் அச்சிறுமியை கடிரட்பட்னா கிராமத்திலுள்ள கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அச்சிறுமியை அறையில் அடைத்துவைத்து கொடூரமான முறையில் 22 நாள்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே சிறுமி அலறல் சத்தம் கேட்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பண்ணையை சோதனையிட்டு, அலங்கோலமான முறையில் கிடந்த 17 வயது சிறுமியை மீட்டனர். இதனைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவரை கட்டாக் நகர காவல் துறையினர் கைதுசெய்தனர். தலைமறைவான நபரை தனிப்படை அமைத்து தேடிவருவதாக காவல் துணை ஆணையர் பிரதீக் சிங் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலக் காப்பகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அநாதை இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தாவூத் இப்ராஹிமிற்குத் தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.