ETV Bharat / jagte-raho

போதையிலிருந்து மீள வா என்றழைத்து இளைஞரை சடலமாக அனுப்பிய சோகம்! - ராணிப்பேட்டை குற்றம்

போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார். மரணம் குறித்து விசாரிக்க உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

suspicious death in rehabilitation centre

author img

By

Published : Feb 4, 2021, 10:59 PM IST

ராணிப்பேட்டை: போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வானாபாடி அடுத்த மாணிக்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(27). இவர் புதுப்பாடி பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் தற்காலிகமாக பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரவணன் தீவிர மது அடிமையாளர் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவியும், உறவினர்களும் சேர்ந்து, அவரை ராணிப்பேட்டையை அடுத்த சீயோன் நகர்ப் பகுதியில் செயல்பட்டு வரும் "நியூ லைஃப் ஹோம்” என்கிற பதிவு செய்யப்பட்ட தனியார் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி, மதுபோதையிலிருந்து அவரை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் சேர்த்து விட்டுள்ளனர்.

இச்சூழலில், நேற்று (பிப்.03) மாலை அம்மையத்தின் நிறுவனரான கிரண், சரவணன் வீட்டிற்குத் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, சரவணன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

சரவணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்த போது, அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரவணனின் மனைவியுடன், உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர்.

சரவணன் உடல்நிலை குறித்து விசாரித்த போது தான், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தது உறவினர்களுக்குத் தெரியவந்தது. இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை எதிரேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்‌. அதில் ஒரு தரப்பினர் “நியூ லைஃப் ஹோம்” மையத்தைச் சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்த ராணிப்பேட்டை காவல்துறையினர், சரவணனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் சரவணன் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நியூ லைஃப் ஹோம் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தின் நிறுவனர் கிரண் விசாரணைக்காக ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், சரவணன் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மையத்திலிருந்தவர்களும், இங்குள்ளவர்கள் தங்களைத் தொடர்ந்து தாக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, இதுபோன்ற தனியார் நிறுவனங்களை துறை சார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த சரவணனின் மரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், தற்போது குடிபோதைக்காகச் சிகிச்சை பெற்று வருபவர்களை வேறு ஒரு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் சரவணன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.