பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் முருகதாஸ். இந்த அமைப்பின் சார்பில் வேப்பேரி ஏ.பி.சாலை 2 ஆவது லேனில் உள்ள சாய்பாபா கோயில் அருகே, பெயர் பலகை ஒன்றை முருகதாஸ் முன்னர் வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது முருகதாஸ் பாரத் இந்து முன்னணியிலிருந்து விலகி, இந்து முன்னணியின் எழும்பூர் தொகுதி செயலாளராக இருந்து வருவதால், ஏ.பி.சாலையில் முன்பு வைத்த பாரத் இந்து முன்னணி பெயர் பலகையின் மீது போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.
இதனால் பாரத் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ஆர்.டி. பிரபு, முருகதாஸிடம் போஸ்டரை எடுக்கும்படி எச்சரித்துள்ளார். இதையடுத்து போஸ்டர் கிழிக்கப்பட்டு இருந்ததால் ஆர்.டி.பிரபு தான் போஸ்டரை கிழித்துவிட்டதாகக் கூறி, இரு அமைப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில், வேப்பேரி காவல்துறையினர் விசாரித்து, இருதரப்பிடமும் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: கணவரை கொல்ல முயன்ற மனைவி, நண்பருடன் கைது