ETV Bharat / jagte-raho

திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலிக்கு கத்திக்குத்து! - திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலிக்கு கத்திக்குத்து

சென்னை: திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியைக் கத்தியால் குத்திய இளைஞரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Shout out to the girlfriend who refused to marry

author img

By

Published : Mar 17, 2020, 9:34 PM IST

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், ரோட்டரி நகரைச் சேர்ந்த பாபு என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். திடீரென அந்தப் பெண் பாபுவுடன் பேசுவதை நிறுத்திவிட்டு விலகிச் சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று வீட்டில் அப்பெண் தனியாக இருந்தபோது பாபு அங்கு வந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்பெண் மறுத்ததால் ஆத்திரத்தில் பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் இடது கை, வலது கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு ஓடியுள்ளார்.

வலியில் பெண் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பாபுவைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி - போக்சோவில் முதியவர் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.