கரோனா தொற்று பாதிப்பால் இந்த உலகம் முழுவதும் மிக மோசமான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டிக்டாக் நட்சத்திரம் சியா கக்கர், நேற்று (ஜூன் 25) தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மேலாளர் அர்ஜுன் சாரின் கூறுகையில், "நேற்று முன்தினம் என்னுடன் அவர் ஒரு பாடல் ஒத்துழைப்புக்காக பேசும்போது நல்ல மனநிலையில் தான் இருந்தார்.
பிறகு அவர் எதற்கு தற்கொலை செய்து கொண்டார் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அவருடைய காணொலிகளை பார்க்கிறீர்கள். அவர் மிகவும் நல்லவர் என்பதை அதில் காணலாம்.
அவர் இந்த பாதையைத் தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் எப்போதேனும் மனச்சோர்வடைந்தால், தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள்" எனக் கூறினார்.
சியா புதுடெல்லியின் ப்ரீத் விஹாரில் வசித்து வந்தார். இவர் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப் ஷாட், யூடியூப் போன்ற அனைத்து ஆன்லைன் தளங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
இந்த எல்லா தளங்களிலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தனர். அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அதேபோல் டிக்டாக்கில் 1.1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறியதாக கிரிக்கெட் வீரரின் கார் பறிமுதல்