தருமபுரி மாவட்டத்தில், சில இடங்களில் போலி மதுபான விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து காவல்துறைக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பளார் அண்ணாதுரை தலைமையிலான காவலர்கள் தொடர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு போலி மதுபானங்கள் காரில் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளி சந்தை அருகே மதுவிலக்கு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் .
அப்போது, காரில் 20 மூட்டைகளில் 960 போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, மதுபாட்டில் கடத்தி வந்த காரை ஓட்டிவந்த கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த சிராஜிதின் (31), மதுவிற்பனை செய்யும் பாப்பாரபட்டி பகுதியைச் சேர்ந்த மணி (51) ஆகியோரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 960 மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.