தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேல்திருப்பந்துருத்தி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் வினோத் (20). இவர் குடமுருட்டி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு திருப்பந்துருத்தி பிரதான சாலை வழியாக வந்துள்ளார். அப்போது, நடுக்காவேரி காவல் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம், வினோத் வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனைசெய்தார்.
இதில், அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மாட்டு வண்டியைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த வினோத் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.
அதேபோன்று, அரசு அனுமதி இல்லாமல் குடமுருட்டி ஆற்றில் மணல் ஏற்றிவந்த திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கதிரவன் (20) என்பவரையும் காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கலந்தாய்வு - எட்டு மாணவர்கள் இருப்பிட சான்றிதழில் சந்தேகம்!