கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை சீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புவனா. இவரது கணவர் விஜயகுமார், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் குற்றவியல் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். சொத்துத் தகராறு காரணமாக, விஜயகுமாரும் அவரது தம்பி துரையும் கடந்த சில வருடங்களாக பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு, புவனாவின் வீட்டிற்கு வந்த துரை, வீட்டை காலி செய்து தரும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் கழித்து நேற்று முன் (அக்.12) தினம் விஜயகுமார் வீட்டிற்கு வந்த துரை, புவனாவிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், துரை கத்தியால் புவனாவின் முதுகிலும் கையிலும் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த புவனா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து புவனா கொடுத்த புகாரின் பேரில், மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து துரையை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : வீட்டை எழுதித் தரக் கேட்டு மனைவி குடும்பத்தார் மிரட்டல்: மின்வேலை செய்பவர் தற்கொலை