ETV Bharat / jagte-raho

ஏசியில் மின் கசிவு - தீ பற்றி எரிந்த ஏடிஎம் மையம்! - Fire at the ATM center due to an electrical leak in the AC

சேலம்: காந்தி ரோடு பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஏசியில் மின் கசிவு! ஏடிஎம் மையத்தில் தீ விபத்து!

author img

By

Published : Jun 14, 2020, 4:47 PM IST

சேலம் காந்திரோடு பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வந்தபோது, மையத்திற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவர்கள் தீ விபத்து குறித்து அருகிலுள்ள செவ்வாய்பேட்டை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீயை அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். இத் தீ விபத்தில் ஏடிஎம் மையத்தில் இருந்த நான்கு ஏசி மற்றும் மேற்கூரை எரிந்து சாம்பலாகின.

தீ விபத்தானது ஏடிஎம் மெஷினுக்குள் பரவுவதற்குள் அணைக்கப்பட்டதால் ஏடிஎம்மில் இருந்த ரூ . 42 லட்ச ரொக்க பணம் காப்பாற்றப்பட்டது. அங்கிருந்த ஏசியில் மின் கசிவு ஏற்பட்டதால், இந்த விபத்து நடந்துள்ளது என அஸ்தம்பட்டி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏடிஎமில்   தீயை அணைக்கும் பணியில் செவ்வாய்பேட்டை தீயணைப்புதுறையினர்

இதையும் படிங்க; எண்ணெய் கிணறு தீ விபத்து: அசாம் விரைந்த அமெரிக்க வல்லுநர்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.