ETV Bharat / jagte-raho

சாத்தான்குளம் கொலை வழக்கு: குடும்பத்தினரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

author img

By

Published : Jul 11, 2020, 2:29 PM IST

Updated : Jul 11, 2020, 7:46 PM IST

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக இன்று முதல் தங்களது விசாரணையை தொடர்ந்து நடத்தவுள்ளனர், சிபிஐ அலுவலர்கள். அதன்படி இன்று காலை நெல்லையிலிருந்து கிளம்பி சாத்தான்குளத்திலுள்ள ஜெயராஜ்ஃபென்னிக்ஸ் வீட்டிற்குச் சென்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர்.

sathankulam case, சாத்தான்குளம் வழக்கு
sathankulam case

தூத்துக்குடி: ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக ஜெயராஜ் குடும்பத்தினரிடம் மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ்(58), ஃபென்னிக்ஸ்(31) ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாகக்கூறி, சாத்தான்குளம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சூழலில் தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டிலும், உலகளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக காவல் நிலையத்தில் காவல் துறையினர் அடித்து சித்திரவதை செய்ததில்தான் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

'சாத்தான்குளம் வழக்கு: உரியவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்' - ஐ.நா. சபை

இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. முதலில் இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர், கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இத்தருணத்தில் மாநில அரசின் பரிந்துரையின்படி, மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) இந்த வழக்கு மாற்றப்பட்டது. எனவே, சாத்தான்குளம் தந்தை - மகன் இறந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட அலுவலர்கள் குழு நேற்று (ஜூலை 10) தூத்துக்குடி வந்தடைந்தது.

இவர்கள் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அலுவலரான மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அனில் குமாருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் வழக்குத் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்ட அவர்கள் திருநெல்வேலியில் ஓய்வெடுத்தனர்.

விசாரணை நடத்தும் சிபிஐ அலுவலர்கள்

இதனையடுத்து இன்று முதல் தங்களது விசாரணையை தொடர்ந்து நடத்தவுள்ளனர். அதன்படி சிபிஐ அலுவலர்கள் இன்று காலை திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் வந்தடைந்தனர். தொடர்ந்து சாத்தான்குளத்தில் ஜெயராஜ் - ஃபென்னிக்ஸ் வீட்டிற்குச் சென்ற அவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து ஜெயராஜ் நடத்திவந்த கைப்பேசி கடை, அருகே உள்ள கடைக்காரர்கள், சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Last Updated : Jul 11, 2020, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.