திருவள்ளூர் மாவட்டம் கொளுத்துவான் சேரியை சேர்ந்தவர் வசந்தகுமார்(21). இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் நண்பர்களுடன் வீட்டை விட்டுச் சென்ற இவர் இன்று காலை வரை திரும்பாததால் அவரது மனைவி வினிதா, உறவினர்களுடன் வசந்தகுமாரை தேடிவந்துள்ளனர்.
இதனையடுத்து அவர் அங்குள்ள இடுகாட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற வசந்தகுமாரின் உறவினர்கள் அவர் சடலமாக கிடப்பதைக்கண்டு கதறி அழுதனர்.
தகவலறிந்து அங்கு வந்த மாங்காடு காவல் துறையினர் உடலை மீது உடற்கூறாய்விற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.