பீர்க்கன்கரணை சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் சுசித்ரா (46). நேற்று மாலை வீட்டில் சுசித்ரா தனியாக இருந்தபோது, கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்த நான்கு கொள்ளையர்கள், அவரை மிரட்டி ஆறரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதேபோல், பழைய பெருங்களத்தூர் மூவேந்தர் நகரில், நேற்று இரவு உஷா என்ற பெண்ணின் வீட்டினுள் கத்தியுடன் புகுந்த கொள்ளையர்கள் அவரை மிரட்டி 8 சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
மேலும், முடிச்சூர் மதனபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியரிடம், கொள்ளையர்கள் செல்போனைப் பறித்துச் சென்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை நிகழ்வுகளால், பீர்க்கன்கரணை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு