ETV Bharat / jagte-raho

பதுக்கி வைத்திருந்த 150 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்!

கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் காவல் துறையினர் கைப்பற்றி, ராமசாமி என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ration rice stored for smuggling seized in tiruvallur

author img

By

Published : Sep 30, 2020, 1:30 PM IST

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

செங்குன்றம் ரெட்டேரி அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ராஜமங்கலம் ஆய்வாளர் ராஜ்குமாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில், கண்ணகி நகர் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திராவிற்கு கடத்தப்படுவது தெரியவந்தது. இந்த பதுக்கலில் ஈடுப்பட்ட கண்ணகி நகரைச் சேர்ந்த ராமசாமி (50) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், கடத்தலுக்காக பயன்படுத்திய வேனையும், அரிசி மூட்டைகளையும் அம்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.