வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அண்ணா நகர் மலைப்பகுதி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அவர் தலைமையில் அலுவலர்கள் அண்ணா நகர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்துகொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் அலுவலர்களை கண்ட கடத்தல்காரர்கள் சரக்கு வாகனத்தையும், இருசக்கர வாகனத்தையும் சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதைக்கண்ட அலுவலர்கள் சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், இரண்டு இருசக்கர வாகனம், 450கிலோ ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:வாணியம்பாடியில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்