ETV Bharat / jagte-raho

‘ஆன்லைன் டேட்டிங் செயலி’ பழக்கத்தால் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் - மகாராஷ்டிரா புனே குற்றச் சம்பவங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்னை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

rape cases
பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Dec 29, 2020, 7:54 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் பிம்ப்ரி சிஞ்ச்வாத் என்ற பகுதியில் 26 வயது கொண்ட விமான பயணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தற்காக 28 வயது கொண்ட இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபருக்கு எதிராக புனேவின் வகாட் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர் தகவலின்படி, ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து இரவு உணவிற்காக இருவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்னை மது அருந்தும்படி இளைஞர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதன்பின் அப்பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அந்தசமயம் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து, உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல் துறையினர், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.