கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியத்தின் மகன் நந்தகுமார்(29). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் நிதி பிரிவில் வேலை பார்த்துள்ளார்.
கடந்த 5ஆம் தேதி, நந்தகுமாரின் தந்தை பாலசுப்ரமணியம், தனது மகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து, விபத்து என வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
சிகிச்சை பெற்றுவந்த நந்தகுமாரின் உடலில் காயங்கள் இருந்ததால் காவல்துறையினர் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று நந்தகுமாருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஓட்டுநராக இருக்கும் கிருஷ்ணக்குமார் (36) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில், நந்தகுமாருக்கும், கிருஷ்ணக்குமாருக்கும் தன்பாலுறவு இருந்திருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன் மற்றொரு வாலிபருடன் கிருஷ்குமாருக்கு தன்பாலுறவு இருப்பது நந்தகுமாருக்கு தெரியவந்தது. இதனால், நந்தகுமார் கிருஷ்ணகுமாரை திட்டியுள்ளார்.
![நண்பரைக் கொன்ற ஓட்டுனர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-pollachi-marder-arrest-vis-tn10008_07122020155428_0712f_1607336668_860.jpg)
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், கடந்த 5 ஆம் தேதி எஸ்.மேட்டுப்பாளையம் பேருந்து நிறத்தத்தில் அமர்ந்திருந்த நந்தகுமாரின் தலையில் அரிவாளாலால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். ரத்தவெள்ளத்தில் போராடிய நந்தகுமார் கோவை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனத் தெரியவந்தது. இதற்கிடையில், கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகுமார் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல் துறையினர், கிருஷ்ணகுமாரைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: இடுக்கியில் தோட்டத் தொழிலாளிகள் இருவர் வெட்டிக்கொலை