நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த ஆயுதப்படை வேனில் மொத்தம் ஆறு காவலர்கள் பயணம் செய்தனர். அப்போது திருவாரூர் அருகே சுந்தர விளாகம் பகுதியில் வேனின் எதிர் திசையில் தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.
அதிவேகமாக வந்த அந்த பேருந்தின் மீது மோதமால் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பியபோது அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஆறு காவலர்களும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படியுங்க: