பெரம்பலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் ஊமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தவமணிகண்டன்.
விருத்தாசலத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி, இரு சக்கர வாகனத்தில் தவமணிகண்டன் சென்று கொண்டிருந்தபோது, திருமாந்துறை சுங்கச் சாவடி அருகே உள்ள வேகத் தடையில் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரம் தவமணிகண்டன் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த மங்கலமேடு போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இருசக்கர வாகனம் ஓட்டியபோது, தவமணிகண்டன் தலைக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இருசக்கர வாகனம் விபத்து: இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு