டெல்லி: டெல்லியில் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவரிடம் சிறப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அவரிடம் காவலர்கள் கிடுக்கிப்படி விசாரணையில் இறங்கினார்கள். அந்த விசாரணையில், சிறப்பு பிரிவு காவலர்கள் கைது செய்துள்ள நபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது முஷ்தாகிம் கான் என்ற அபு யூசுப் என்பது தெரியவந்தது.
அதன்பின்னர் யூசுப்பை அவரின் சொந்த கிராமமான உத்தரப் பிரதேச மாநிலம் பாதியா பைசகி கிராமத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரின் வீட்டிலிருந்து பயங்கர வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் யூசுப் சமூக வலைதளம் மூலமாக பல்வேறு பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்தும் அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கான இந்திய தலைவர் யூசுப் அல்-உடனும் தொடர்பில் இருந்துள்ளார்.
அவர் 2017ஆம் ஆண்டு சிரியா போரில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அபு ஹூசைபா அல் பாகிஸ்தானி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இவர், 2019 ஜூலை மாதம் நடந்த ஏவுகணை தாக்குதலில் உயரிழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: என்.ஐ.ஏ. பிடியில் லண்டன் தாக்குதல் பயங்கரவாதி!