ETV Bharat / jagte-raho

தந்தத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்ட குட்டி யானை!

பெங்களூரு: ஜவளகிரி வனப்பகுதியில் யானை தந்தத்திற்காக குட்டி யானை ஒன்று வேட்டைக்காரர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட குட்டியானை
சுட்டுக் கொல்லப்பட்ட குட்டியானை
author img

By

Published : Nov 7, 2020, 11:05 AM IST

தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியான ஜவளகிரி வனப்பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர்களால் குட்டி யானை ஒன்று கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

ஜவளகிரி பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தேடி சென்னமலங்கே பகுதிக்கு சென்றுள்ளன. அதனைக் கண்ட வேட்டைக்காரர்கள் அவற்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதனால் பயந்து போய் யானைகள் சிதறியோடியுள்ளன. அதில் குட்டி யானை ஒன்று சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட குட்டியானை

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த வனத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்டி யானை மீது வேட்டைக்காரர்கள் மூன்று முறை சுட்டுள்ளதாக பரிசோதனை செய்த கால்நடைக்குழு தெரிவித்துள்ளது. யானை தந்தத்திற்காக இத்துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியரின் மூக்கை உடைத்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.