ETV Bharat / jagte-raho

குற்றம் - 02: இந்தியாவை அச்சுறுத்தும் பிஷிங் - தப்பிக்க வழிகள் என்ன? - பிஷிங் இணைய மோசடி

ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள 20 லட்சம் இணையப் பயன்பாட்டாளர்கள் வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்களால் பாதிப்பைச் சந்திக்கும் இடர் தற்போது எழுந்துள்ளது. பிஷிங் என்ற இணைய மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைக் காணலாம்.

பிஷிங்
பிஷிங்
author img

By

Published : Jun 22, 2020, 5:44 PM IST

வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கோவிட் - 19 தொடர்பான இணையச் செய்திகள் மூலம் பிஷிங் என்ற மோசடி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்தப் பெரும் இணைய வழித் தாக்குதல் இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளை குறிவைத்தே நடத்தப்படுகிறது என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்த இணையத் தாக்குதலின் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களின் வங்கிக் கணக்குகள், சிறு, பெரு நிறுவனங்களின் வணிக கணக்குகள் உள்ளிட்ட விவரங்களைக் களவாடுவதை லாசரஸ் என்ற இணைய மோசடிக் குழுமம் இலக்காகக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பிஷிங் நடவடிக்கை என்ன, இதிலிருந்து தப்பிப்பது எப்படி என இணையப் பாதுகாப்பு வல்லுநர் பவன் துக்கல் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

பிஷிங் - தப்பிக்க வழிகள் என்ன?
பிஷிங் - தப்பிக்க வழிகள் என்ன?

அதன் முக்கிய அம்சங்கள்:

  • கரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் பிஷிங் போன்ற மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
  • இதைத் தடுக்க அரசு கடுமையான இணையச் சட்டங்களை அமல்படுத்தி, செயல்படுத்த வேண்டும்
  • பிஷிங் போன்ற செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிடும்
    இணையப் பாதுகாப்பு வல்லுநர் பவன் துக்கல் கருத்து

இதையும் படிங்க: குற்றம் - 01: 'ஜூஸ் ஜேக்கிங்' மூலம் ஹேக் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.