ETV Bharat / jagte-raho

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள் - perambalur accident cctv footage

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

perambalur accident cctv footage
perambalur accident cctv footage
author img

By

Published : Oct 18, 2020, 12:47 PM IST

Updated : Oct 18, 2020, 3:06 PM IST

பெரம்பலூர்: நகர்ப்புற பகுதியில் நேற்று (அக். 17) காலை இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் சென்னையில் மின்வாரிய உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் பெரம்பலூருக்கு வந்த ராமதாஸ் தனது உறவினரும், செட்டிகுளம் மின் வாரியத்தில் உதவி மின் வாரிய பொறியாளராக பணிபுரிந்து வரும் பிரபு என்பவரை அழைத்து கொண்டு பணி நிமித்தமாக, பாலக்கரை பகுதிக்கு வந்துள்ளார்.

பெரம்பலூர் வாகன விபத்து குறித்த சிசிடிவி பதிவுகள்

அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி கீழே நிலைகுலைந்து விழுந்த அவர் மீது, லாரியின் சக்கரம் ஏறியதில் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரபு என்பவர் படுகாயங்களுடன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இவ்வேளையில் இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Oct 18, 2020, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.