ETV Bharat / jagte-raho

மாநகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றிய பெண்ணின் கை துண்டிப்பு! - மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி: மாநகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றிய பெண்ணின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.

The amputation of the hand of the woman who worked in the corporation landfill!
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jul 30, 2020, 7:02 PM IST

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகம் சார்பில் மேலப்பாளையம் என்ஜிஓபி காலனியில் நுண் உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது.

அதாவது மாநகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு, அரவை இயந்திரம் மூலம் உரமாக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இங்கு பாக்யலட்சுமி என்ற தூய்மை பணியாளர் இயந்திரத்தில் குப்பைகளை கொட்டும்போது எதிர்பாராதவிதமாக அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.

பின்னர், உடனிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர். இதற்கிடையில் மாநகராட்சியின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக பாக்கியலட்சுமியின் உறவினர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

உரம் அரைக்கும் இயந்திரத்துக்கு என்று தனியாக ஆள்கள் எதுவும் நியமிக்காமலும், உரிய பயிற்சி இல்லாமலும் தூய்மை பணியாளர்களை கொண்டு இயந்திரத்தை இயக்குவதன் மூலம் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், அங்கு தரையில் அமர்ந்த பொதுமக்கள் மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோஷமிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.