ETV Bharat / jagte-raho

ஆன்லைன் மூலம் ஐபிஎல் சூதாட்டம்; சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது! - பணம் வைத்து ஆன்லைன் மூலம் ஐ.பி.எல் சூதாட்டம்

நாமக்கல்: ஆன்லைன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

ipl_gambling
ipl_gambling
author img

By

Published : Oct 30, 2020, 10:45 AM IST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரிலிருந்து மோகனூர் செல்லும் சாலையில், ஆன்லைன் மூலமாக ஐ.பி.எல் சூதாட்டம் நடைபெறுவதாக துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா ரண வீரனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மோகனூர் சாலையில் செயல்பட்டு வந்த மீன் கடை ஒன்றில், பணம் வைத்து ஆன்லைன் மூலம் ஐ.பி.எல் சூதாட்டம் நடைபெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த சகோதரர்களான தங்கமணிகண்டன், சந்தானகுமார், லாரி புக்கிங் தொழில் செய்து வரும் பாலசுப்பிரமணியம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பரமத்தி வேலூர் போலீசார், மூவரையும் பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரணிகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.