ETV Bharat / jagte-raho

தடையை மீறி மலையேற்றப் பயிற்சி - உயிரைப் பறிகொடுத்த வங்கி ஊழியர்!

தடையை மீறி மலையேற்றப் பயிற்சி அளிக்கச் சென்ற வங்கி ஊழியர் தவறிவிழுந்து உயிரிழப்பு. உடன் சென்றவர்கள் தப்பி ஓட்டம். இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் மீட்புப் படையினர் உடலை மீட்டனர்.

one dead in thiruvannamalai Trekking
one dead in thiruvannamalai Trekking
author img

By

Published : Oct 10, 2020, 6:05 PM IST

திருவண்ணாமலை: தடையை மீறி சிறுவர்களுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கச் சென்ற, வங்கி காசாளர் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உலக பிரசித்திப் பெற்ற, நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கும், பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான, மலையே சிவனாக வழிபடக்கூடிய திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலைவுள்ளது.

உயிருடன் இருப்பவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

இன்று அந்த மலைமீது 15 சிறுவர்கள் உள்பட 17 பேர் கொண்ட குழு, காலை 6:30 மணியளவில் தடையை மீறி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இக்குழுவில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் பணியாற்றிவந்த, 42 வயது மதிக்கத்தக்க ஆனந்தராஜ் என்பவர் சிறுவர்களுக்கு மலையேற்றப் (ட்ரெக்கிங்) பயிற்சி அளிக்க அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

one dead in thiruvannamalai Trekking
உயிரிழந்த வங்கி காசாளர் ஆனந்தராஜ்

இச்சூழலில், சிறுவர்களுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்த விஜயராஜ், எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து வழுக்கி விழுந்தார். பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தவரைக் கண்டு உடன் வந்திருந்த 16 பேரும் தப்பியோடியுள்ளனர்.

பொதுவாக மலை ஏறுபவர்கள் பேகோபுரம் வழியாக ஏறுவது வழக்கம். அதற்கு மாறாக அனுமதியின்றி கந்தாஸ்ரமம் வழியாக, வனத் துறையினருக்கு தெரியப்படுத்தாமல் சிறுவர்களை ஆனந்தராஜ் அழைத்து வந்து மலையேற்ற பயிற்சி கொடுத்தது தெரியவந்தது. ஆனந்தராஜ் விழுப்புரம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாய் - காவல் துறையினர் விசாரணை!

மலையேற்ற பயிற்சியின்போது ஆனந்தராஜ் தவறிவிழுந்த சம்பவத்தை அறிந்த அவரது மனைவி, காவல் நிலையத்தில் கணவனை மீட்கும்படி புகாரளித்துள்ளார். காவல் துறையில் துரிதமாக செயல்பட்ட வருவாய், தீயணைப்பு, வனம் ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் குழுக்களுடன் ஆனந்தராஜை மீட்கச் சென்றனர். ஆனால், அவரை மீட்டபோது உயிரிழந்ததைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தடையை மீறி மலையேற்றப் பயிற்சி - உயிரைப் பறிகொடுத்த வங்கி ஊழியர்

மலையையே சிவனாக வழிபட்டு வரும் திருவண்ணாமலையில், வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அனுமதியின்றி மலை மீதேறி, பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வாடிக்கையாக இருந்துவந்தது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி மலை மீது ஏறுவதற்கு தடை விதித்திருந்த நிலையில், தற்போது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபோன்று அசம்பாவிதங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் வனத் துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.