மயிலாப்பூர் பல்லக்குமா நகரைச் சேர்ந்தவர் மோகன் (50). அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (25). இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தங்களது வீட்டின் அருகே மது அருந்துவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று லோகேஷ் தன்னிடமிருந்த பிளேடால் மோகனின் கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகனை அருகிலிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மோகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த லோகேஷை இன்று கைதுசெய்து, அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த தூப்பாக்கிகள் - ஒருவர் கைது!