தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் இருக்கக்கூடிய கடை எண்.5169 என்ற கடையில் தொடர்ந்து மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் மதுப்பிரியர் ஒருவர் அந்தக் கடைக்கு மது வாங்க சென்றபோது, கரோனா காலத்தில் வருமானம் இல்லை இப்படி மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் விலை வைத்து விற்பனை செய்வது நியாயமா? எனக் கேட்டதற்கு, 'இது கரோனா காலம், எங்களுக்கும் தான் வருமானம் இல்ல... என்ன பண்றது? அதனாலதான் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குறோம்' என அரசு மதுபான கடையின் கண்காணிப்பாளர் பதில் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடைகளில் உரிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும், அதற்கான ரசீது வழங்க வேண்டும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக அரசு மதுபான கடை கண்காணிப்பாளரே ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்தக் கண்காணிப்பாளர் பேசிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:ராயபுரத்தில் மூன்று வயது குழந்தை கடத்தல்!